free website hit counter

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
காணி ஒன்று தொடர்பில் வர்த்தகர் ஒருவரை பயமுறுத்தி பணம் பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காகவே இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 25 மில்லியன் ரூபா மற்றும் 1 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடாக செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிதிமோசடி விசாரணைப் பொலிஸ் பிரிவினால் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction