free website hit counter

2024 பட்ஜெட் 41 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 உறுப்பினர்களும் எதிராக 81 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர் டைன கமகே, SJB பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction