free website hit counter

எரிபொருள் விலைக் குறைப்பு; நிவாரணம் வழங்க முயற்சி: பஷில் ராஜபக்ஷ

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின், அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற பின்னர் பெல்லன்வில ரஜமஹா விகாரைக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட நிதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் பொருளாதார நிலைமைகளை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வார். சகல பொருளாதார காரணிகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி எரிபொருள் விலை குறித்து ஒரு தீர்வை எடுப்பாரென எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் கடினமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது கட்சியின் கொள்கையான பெறுபேறு பொருளாதாரத்தின் முன்னேற்றமாக அமையும்.” என்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: