free website hit counter

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
10 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு.
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (25) 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (25) மு.ப. 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 10 மணி நேர நீர் வெட்டு அமுலாகும் இடங்கள் :

• கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகள்
• மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை பகுதிகள்
• கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள்
• இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகள்

எனவே, இது தொடர்பில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், உரிய காலப் பகுதிக்கு தேவையான நீரை சேகரித்து வைப்பதன் மூலம் அசௌகரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: