free website hit counter

மான்செஸ்டர் யுனைடெடை வீழ்த்தி FA கோப்பையை 7வது முறையாக கைப்பற்றியது மான்செஸ்டர் சிட்டி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
7வது முறையாக FA கோப்பையை வென்றது.
இங்கிலாந்தில் நேற்று இரவு Wembley மைதானத்தில் நடந்த FA இறுதிப் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக தொடங்கி ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே சிட்டி அணியின் கேப்டன் குன்டோகான் எதிரணி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மான்செஸ்ட்ர் சிட்டி 1-0 என் முன்னிலைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, மான்செஸ்டர் யுனைடெட் வீரர் புருனோ பெர்னாண்டஸ் 33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன.

2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் மான்செஸ்டர் சிட்டி கைதான் ஓங்கியிருந்தது. 51-வது நிமிடத்தில் மீண்டும் குன்டோகான் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று, 7வது முறையாக FA கோப்பையை வென்றது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: