இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி வெறும் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்தது.
இதன்மூலம் 79 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் தனது குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது. அத்துடன், டெஸ்ட் போட்டியொன்றின் முதல் இன்னிங்ஸில் மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது இடம்பிடித்தது.