free website hit counter

மகரம் : ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆகஸ்ட் மாத  மகர இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ  - பஞசம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன்  - பாக்கிய    ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2024 அன்று சூரியன்  களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று செவ்வாய் பஞசம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-08-2024 அன்று புதன் களத்திர  ஸ்தானத்தில் இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
திட்டங்களை தீட்டுவதில் கெட்டிக்காரரான மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். 

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். 

கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.  
அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.  

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

உத்திராடம்:
இந்த மாதம் எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.

திருவோணம்:
இந்த மாதம் சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.

அவிட்டம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

 
 
 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula