free website hit counter

தனுசு : ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆகஸ்ட் மாத  தனுசு இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராஹூ  - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2024 அன்று சூரியன்  அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-08-2024 அன்று புதன் அஷ்டம  ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
மற்றவர்களுக்கு மதிப்பும், கவுரவமும் தரக் கூடிய அதே நேரத்தில் தேவையான உதவிகளையும் தயங்காமல் செய்யும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். 

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். 

கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.

மூலம்:
இந்த மாதம் மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையும் நாளிது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

பூராடம்:
இந்த மாதம் உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

உத்திராடம்:
இந்த மாதம் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.

பரிகாரம்:  பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

 
 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula