free website hit counter

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் ரூபா 1,350 வழங்க ஒப்பந்தம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவுடன் நாளாந்தம் 1,350 ரூபாவை நாளாந்தம் வழங்குவதற்கு சம்பள சபையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் தொழிலாளர் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்ட தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

அதன்படி இன்று முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தொழிலாளர் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், "தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினால் EPF மற்றும் ETF உட்பட ஒரு நாளைக்கு ரூ.1,552 பெற வேண்டும் என்று நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தோம்."

தொழிலாளர்களுக்கு அதிக சுமைகளை சுமத்த வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

“அதாவது EPF மற்றும் ETF இல்லாமல் ரூ.1,350. தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வழங்கப்படக் கூடாது, தோட்டத் தொழிலாளிகளின் உழைப்பை மட்டுப்படுத்த முடியாது. அதிகமாக வேலை செய்தால் அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கலாம். அதை ரூ.350க்கு மட்டுப்படுத்த முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction