free website hit counter

பைசர் தடுப்பு மருந்தை ஒரு மாதம் வரை குளிர் சாதனப் பேட்டியில் சேமிக்க அமெரிக்கா அனுமதி!

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகளவிலும், அமெரிக்காவிலும் பரவலாகப் பயன்படுத்தப் படும் தடுப்பு மருந்தான பைசர் மற்றும் பயோண்டெக்கின் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் குளிர்சாதனப் பெட்டி வெப்ப நிலையில் சுமார் ஒரு மாதம் வரை அமெரிக்காவில் சேமித்து வைக்கலாம் என அமெரிக்க சுகாதார ஒழுங்கு ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது பைசரின் தடுப்பூசியை பொது மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை இன்னும் இலகுவாக்கியிருப்பதாகக் கருதப் படுகின்றது. முன்னதாக சுமார் 2 தொடக்கம் 8 டிகிரி செல்சியஸ் குளிர்சாதனப் பெட்டி வெப்ப நிலையில் இந்த பைசர் தடுப்பூசியை வெறும் 5 நாட்களுக்கே வைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அண்மைய ஆய்வுப் படி இந்த காலத்தை ஒரு மாதம் வரை நீடிக்கலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பும் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை ஐரோப்பிய மருந்து ஏஜன்சியும் பைசர் தடுப்பூசியை கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை சேமித்து வைக்கலாம் என அனுமதியளித்திருந்தது. பைசர் தடுப்பு மருந்தை தயாரிக்கப் பட்ட ஆரம்ப கட்டத்தில் அதனை -80 தொடக்கம் - 60 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தான் நீண்ட காலத்துக்கு சேமித்து வைக்கப் பட முடியும் என அந்நிறுவனம் அறிவித்திருந்ததும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடான உக்ரைனில் தடுப்பூசி நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதாகக் கூறி அந்நாட்டு சுகாதார அமைச்சர் மேக்சிம் ஸ்டெபானோவ் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உக்ரைனில் இந்தத் தடுப்பூசி நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாகக் கூறியே செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் படி மேக்சிம் ஸ்டெபானோவ் பதவி நீக்கப் பட்டார்.

மேலும் உக்ரைனில் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கைகள் துரிதப் படுத்தப் படும் என்றும், விரைவில் புதிய சுகாதார அமைச்சர் நிர்ணயிக்கப் படுவார் என்றும் உக்ரைன் பிரதமர் டெனிச் ஷ்மைஹால் உறுதிப் படுத்தியுள்ளார்.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 165 589 002
மொத்த உயிரிழப்புக்கள் : 3 432 531
குணமடைந்தவர்கள் : 145 871 733
ஆக்டிவ் தொற்றுக்கள் : 16 284 738
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 99 943

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 33 802 324 : மொத்த உயிரிழப்புக்கள் : 601 949
இந்தியா : 25 772 440 : 287 156
பிரேசில் : 15 815 191 : 441 864
பிரான்ஸ் : 5 917 397 : 108 181
துருக்கி : 5 151 038 : 45 419
ரஷ்யா : 4 965 676 : 116 965
பிரிட்டன் : 4 452 527 : 127 694
இத்தாலி : 4 172 525 : 124 646
ஜேர்மனி : 3 627 777 : 87 405
ஸ்பெயின் : 3 625 928 : 79 568
ஆர்ஜெண்டினா : 3 411 160 : 72 265
கொலம்பியா : 3 161 126 : 82 743
போலந்து : 2 861 351 : 72 500
ஈரான் : 2 792 204 : 77 765
மெக்ஸிக்கோ : 2 387 512 : 220 850
தென்னாப்பிரிக்கா : 1 621 362 : 55 507
கனடா : 1 342 388 : 25 066
பாகிஸ்தான் : 890 391 : 19 987
பங்களாதேஷ் : 783 737 : 12 248
சுவிட்சர்லாந்து : 684 954 : 10 755
இலங்கை : 151 343 : 1051
சீனா : 90 920 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction