நேற்றிரவு சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதுவரை 8பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மாகாணத்தில் யாங்பி யீ என்ற சுயாட்சி பகுதியில் 5.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கங்கள் பதிவானது. இதில் பாறைகள் உருண்டோடி ஒருவர் மரணித்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சீனாவின் மற்றுமொரு பகுதியான டாலிக்கில் 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் குயிங்காய் பகுதியிலும் நேற்றிரவு 7.0 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவானது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அத்தோடு சேத நிலவரங்கள் குறித்தும் உடனடியாக எதுவும் வெளியாகவில்லை.