எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (ஜன. 09) கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
இந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும், அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு கூடியதாகவும், பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தலைவர் வஜிர அபேவர்தன போன்ற ஐ.தே.க உயர்பீடங்கள் கலந்துகொண்டதாகவும் லங்காதீப மேலும் தெரிவித்துள்ளது.