பல SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு உடையில் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.
SJBயின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம், டெய்லி மிரர் வினவிய போது, அவர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகத்தான் இன்று கறுப்பு அணிந்து வந்ததாகக் கூறினார்.
எவ்வாறாயினும், தலதா அத்துகோரள, கபீர் ஹாசிம் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண உடையில் வந்ததால் கட்சியின் நாடாளுமன்றக் குழு பிளவுபட்டதாகத் தெரிகிறது.