free website hit counter

SLPP பொது வேட்பாளரை நிறுத்தும்: மஹிந்த

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடந்த காலங்களில் செய்தது போல் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
“கடந்த காலத்தில் செய்தது போல் பொது வேட்பாளரை நிறுத்துவோம். எங்கள் வேட்பாளர் எந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருக்கப் போகிறார் என்பதை அனைவரும் பார்ப்பார்கள்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கு, விக்கிரமசிங்க தனது கட்சியில் தொடர்ந்தும் இருந்தால் தாங்கள் அவ்வாறு செய்வோம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். "ரணில் எங்களுடன் இருந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம்" என்றார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் விக்ரமசிங்கவின் வேட்புமனு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் எமது தலைவரின் வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். (4tamilMedia)
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: