free website hit counter

SLPP பிளவு: ஜனாதிபதி ரணிலை விமர்சித்த நாமல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.
“2022 இல் SLPP ரணில் விக்ரமசிங்கவை அரசாங்கத்தை கைப்பற்ற அழைக்க முடிவு செய்தது, அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முழுமையான ஆதரவை அப்போது வழங்கியது. இன்றுவரை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட, ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை, ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவோ அல்லது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

“எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக கட்சிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்ட பிளவு. நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: