பாலஸ்தீனத்தின் காஸாவில் மோதலால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (ஏப்ரல் 01) பாலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்களிடம் காசோலையை கையளித்தார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, இந்த நன்கொடையானது ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட காஸாவின் குழந்தைகள் நிதியத்தின் ஒரு பகுதியாகும். மேலும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.