இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) லோக்சபா தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றதற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்தார்.
"பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பாஜக தலைமையிலான NDA வெற்றி பெற்றதற்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் 'X' (முன்னாள் ட்விட்டர்) இல் பதிவிட்டுள்ளார்.
"நெருங்கிய அண்டை நாடாக, இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்நோக்குகிறது" என்று விக்கிரமசிங்க கூறினார்.