free website hit counter

‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாமலுக்கு அதிக கால அவகாசம் உள்ளது’ – மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று (07) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து ஐக்கிய ஜன பலவேகய (SJB) கூட்டணி அமைப்பது சவாலானது அல்ல என்றும் குறிப்பிட்டார்.

“பத்து கூட்டணிகள் அமைந்தாலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் மக்கள் [SLPP உறுப்பினர்கள்] எல்லா இடங்களிலும் [கூட்டணிகளில்] இருப்பது நல்லது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் கருத்து தெரிவித்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி கண்டிப்பாக அறிவிக்கும் என்றும், SLPP யின் தீவிர உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

"கண்டிப்பாக, அவர்கள் ஒரு வேட்பாளரை குறிப்பிடுவார்கள். நாங்கள் இன்னும் அவர்களை [கட்சி உறுப்பினர்களை] அழைக்கவில்லை. அவர்களுடன் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகனுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: