யாழ்ப்பாணம் பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்றும் மேலும் கூறியுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    