ஈட்டி எறிதல் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (1,455 புள்ளி) முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.
ஒலிம்பிக் மட்டுமின்றி, டைமண்ட் லீக் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா சாதித்ததால் அவருக்கு 'நம்பர் ஒன்' அந்தஸ்து கிட்டியுள்ளது.
கடந்த 5-ம் தேதி தோஹா டயமண்ட் லீக்கில் தங்கம் வென்றதன் மூலம் தனது 2023 சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இந்தப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.