free website hit counter

ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு - மாநில அரசு அதிரடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து கொள்ளலாம் என்று, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் 30 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 30 ஆம் திகதி (வியாழக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை, அதாவது நான்கு நாட்களுக்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகள் தவிர, மற்ற கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மேலும் அத்தியாவசியமின்றி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை, 57 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: