தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், இளைஞர்களின் வாக்குகளை கவர திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு புதிய பதவிகளை வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக தரப்பில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மை வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதால் ஆட்சியில் மாற்றம் வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் தான் நாம்புவதாக தெரிவித்த நயினார் நாகேந்திரன், ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது என தெரிவித்தார்.