free website hit counter

உழவர் திருநாளை கொண்டாடும் உலக தமிழ் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளால் தைப்பொங்கல் நாள் களை கட்டியுள்ளது. மக்களும் பாதுகாப்பாக இல்லங்களில் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தைப்பொங்கல் வாழ்த்து செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாகதற்கு நான் பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction