1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை குறைத்து அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை குறைத்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்காததால் அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.”
இதனையடுத்து 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டம் 50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
1-2ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம், 3-4ம் வகுப்புகளுக்கு 49 சதவீதம், 5ம் வகுப்பிற்கு 48 சதவீதம், 6ம் வகுப்பிற்கு 47 சதவீதம், 7-8ம் வகுப்புகளுக்கு 46 சதவீதம், 9ம் வகுப்பிற்கு 38 சதவீதம், 10ம் வகுப்பிற்கு 39 சதவீதம், 11-12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையிலும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.