சுவிற்சர்லாந்தில் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின், அறிவியல் பணிக்குழுவின் துணைத் தலைவர் உர்ஸ் கர்ரர் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் தெரிவித்தார்.
சுவிற்சர்லாந்தின் மக்கள் தொகையில், தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் 80% தினை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப மதிப்பீடுகள் 5.2 முதல் 5.3 மில்லியன் வரை (சுமார் 60%), இப்போது இலக்கு 6.9 மில்லியனாக இருந்த போதும், புதிய இலக்கு, வைரஸில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக இலையுதிர்கால அலைகளைத் தவிர்க்கும் நோக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரண்டாவது டோஸுக்குப் பிறகு பொதுவாக இந்த மாறுபாட்டிற்கு எதிராக பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால், மத்திய அரசாங்கமும் மாநில அரசுகளும் இப்போது அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதுவரை, சுவிட்சர்லாந்தில் சுமார் 4.2 மில்லியன் மக்கள் குறைந்தது முதல் அளவைப் பெற்றிருக்கிறார்கள். அறியப்பட்ட வட்டாரங்களின் தகவற்படி, வரும் வாரங்களில் மேலும் 1.5-2 மில்லியன் மக்கள் தடுப்பூசி செலுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயது வந்தோரைப் பொறுத்தவரை, 5.7 மில்லியனை எட்டுவதே குறிக்கோள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, டெல்டா மரபணு மாற்ற வைரஸ் மிக விரைவாக பரவுவதால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.