லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள டி. ரெக்ஸ் வகை டைனோசர் ஒன்று விடுமுறைக்காக ஒரு மாபெரும் கிறிஸ்துமஸ் ஸ்வெட்டரை அணிந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விடுமுறை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் அதற்கான அலங்காரங்களை தயார்படுத்தியுள்ளனர். அதில் சற்று வித்தியாசமாக கிறிஸ்துமஸ் குளிர்கால ஆடைகளில் ஒன்றான வண்ண ஸ்வெட்டர்கள் நம்மில் பெரும்பாலோர் தமக்கு மட்டுமல்லாது செல்லப்பிராணிகளுக்குப் அணிந்து அழகு பார்க்கப் பழகிவிட்டோம்.
இதேபோல் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பிரிட்டிஷ் கிறிஸ்துமஸ் ஜம்பர்ஸ் என்ற ஆடை நிறுவனத்துடன் இணைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டைனோசர் ஒன்றுக்கு ஸ்வெட்டர் அணிந்து அழகுபார்த்துள்ளனர்.
இந்த கிறிஸ்மஸ் கால அலங்காரங்களில் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றை மகிழ்ச்சியான ஆச்சரியத்துடன் காண்பித்துள்ளனர். இந்த சீசனில், அருங்காட்சியத்திற்கு வருபவர்கள், 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட பிரமாண்டமான கிறிஸ்துமஸ் ஸ்வெட்டரை அணிந்துகொண்டு விளையாட்டு காட்டும் மாபெரும் அனிமேட்ரானிக் டி.ரெக்ஸைப் பார்த்து மகிழ்வார்கள்.