தனது மகனுக்காக பிரமாண்ட கார் ஒன்றை உருவாக்கி விளையாட கொடுத்திருக்கார் வியட்நாமைச் சேர்ந்த தந்தை ஒருவர்.
மர வேலைப்பாடுகள் செய்துவரும் Trương Văn Đạo என்பவர் கழிக்கப்படும் மரப்பலகைகளை கொண்டு சிறிய கார்கள், தொலைபேசிகள் என வேலைப்பாடுகளுடன் செய்துவருபவர். சொந்தமாக மர அலங்கார கடை வைத்திரருக்கும் இவர் சமீபத்தில் தனது மகனுக்காக சிறிய கார் ஒன்றை மரப்பலகையால் உருவாக்கியுள்ளார். அதாவது உலகின் மிகவும் விரும்பப்படும் வாகனங்களில் ஒன்றான 28-மில்லியன் டாலர் பதிப்புமிக்க ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயிலின் பிரமிக்க வைக்கும் மறுஉருவாக்கமே அது.
இந்த லைஃப் சைஸ் வாகனம் உண்மையான வாகனத்தின் நகலை விட அதிகம். ஏனனில் அந்த தந்தை; காரின் இருக்கைகள், ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் டாஷ்போர்டு உட்பட மரத்தில் மாற்றக்கூடிய உடலை உருவாக்கிய பிறகு, அவர் முன்/ பக்க கண்ணாடிகள், இயங்கும் நீல நிற ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள் மற்றும் பேட்டரியால் இயங்கும் மோட்டார் ஆகியவற்றைச் சேர்த்திருக்கிறார்.
இப்படி முழுவதுமாக செய்து முடிக்க சுமார் 68 நாட்கள் எடுத்தாக தெரிவிக்கும் Trương Văn Đạo அதனை வீடியோ பதிவாகவும் வெளியிட்டுள்ளார்.