free website hit counter

பிரபுசாலமன் - கோவை சரளா இணைந்துள்ள ‘செம்பி’!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரபு சாலமன் என்றாலே மற்றவர்கள் யோசிக்காத புதிய விஷயம் எதையாவது ஒன்றைப் படமாக்கிவிடுபவர்.

கடைசியாக அவர், ‘காடன்’படத்தை இயக்கி இருந்தார். இதில் ராணா, விஷ்ணு விஷால் உட்பட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. என்றாலும் அடுத்து அவர், 'கும்கி 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். அதில், ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் குமார், தம்பி ராமையா, கோவை சரளா உட்பட பலர் நடித்துள்ளார். நாம் இதுவரைக் காமெடியாக பார்த்த கோவை சரளாவை இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. படத்துக்கு ‘செம்பி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதன் கதையை சொல்ல முடியாது, பார்க்க மட்டுமே முடியும் என்று பிரபு சாலமன் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் ட்ரைலர் வெளியாகவிருக்கிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: