free website hit counter

இயக்குநர் பாலா - முத்துமலர் தம்பதி பிரிந்தனர் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சேது, நந்தா, பிதாமகன் தொடங்கி ‘நாச்சியார்’ வரை பல மாறுபட்ட திரைப்படங்களைத் தந்தவர் இயக்குநர் பாலா.

அவருக்கும் மதுரையைச் சேர்ந்தவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓபிஎஸ்ஸின் உறவினருமான முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாகவும், பாலாவின் மனைவி முத்து மலர் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது பற்றி பாலா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து செய்தி உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா. தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத மனிதர்களின் கதைகளைக் கொடுத்த வகையில் பல மாநில இயக்குநர்களால் கவரப்பட்டவர். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்திருக்கும் இந்த விஷயம் அவரது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களும் பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பாலா - முத்துமலர் தம்பதி கடந்த மார்ச் 5-ஆம் தேதியன்று சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction