free website hit counter

சித் ஸ்ரீராமுக்கு மணிரத்னம் சூட்டும் அடுத்த கிரீடம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாடகர் சித்ஸ்ரீராமுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தற்போது உள்ளனர். விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடியபிறகு சித் ஸ்ரீராம் இன்னும் பிரபமானார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரைக் கதாநாயகனாகப் போட்டு படமொன்றை மணிரத்னம் இயக்கவிருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் தகவலைக் கசிய விட்டுள்ளனர்.

கடந்த வாரம் முன்பு, சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைப் பாடி பலரது கண்டனத்துக்கும் ஆளான சித் ஸ்ரீராம், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தனது அம்மா மூலம் கர்னாடக சங்கீதம் பயின்றவர். அங்கே பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூஸிக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்.

2013-ல் வெளியான மணிரத்னத்தின் கடல் படத்தில் தனது முதல் பாடலை பாடினார். அதன் பிறகு மணிரத்னம் தனது தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்தில் இசையமைப்பாளராக்கினார். ஆனால், அதன் பிறகு அவர் எந்தப் படத்துக்கும் சித் இசையமைக்கவில்லை. இந்நிலையில்தான் மணிரத்னமே மீண்டும் அவருக்கு கதாநாயகன் எனும் அடுத்த கிரீடத்தை கொடுக்க ஆயத்தமாகியிருக்கிறார் என்கிறார்கள். இதை சித் ஸ்ரீராமோ, மெட்ராட்ஸ் டாக்கீஸோ மறுக்கமாட்டார்கள் என்றும் தெரிய வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் பின் ஆயத்த வேலைகள் முடிந்ததும் இப்படத்துக்கு அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: