free website hit counter

வைகைப் புயலே வியந்த பொய்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீம்களின் அரசன் என்று புகழப்படும் வடிவேலு,

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்க முயன்று வந்தார். கமல் தன்னுடைய தேவர் மகன் இரண்டாம் பாகமான தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டதால் பழையபடி வடிவேலுவின் நிலை திரிசங்கு ஆனது.

இதற்கிடையில் வடிவேலு புதிதாக நடிக்கும் படத்துக்கு ‘டிடெக்டிவ் நேசமணி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்தப் படத்தை ராம்பாலா இயக்க, சி.வி.குமார் தயாரிப்பதாகவும் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த போஸ்டரை உண்மை என நம்பி ஏராளமானோர் பகிர்ந்தும் வந்தனர். இந்த போஸ்டர் குறித்து அறிந்த தயாரிப்பாளர் சி.வி.குமார் தலையிட்டு “இது உண்மை அல்ல, போலியானது!” எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் அந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், “போலியான பரபுரையாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா... ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா” என பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த போஸ்டரைப் பார்த்த வடிவேலு ‘நாம்மளயே நம்ப வைச்சுப்புடுவாங்கே போல இருக்கே’ என்று பாராட்டியிருக்கிறார்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula