free website hit counter

நயன்தாராவின் அழுகையும் சிரிப்பும்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சித்தார்த் - ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அவள்’ என்ற பேய் படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ்.

இவர் கடந்த 2011 ஆண்டில் வெளியான ‘பிளைண்ட்’ என்ற படத்தை அட்டைக் காப்பியடித்து, 'நயன்தாரா' நடிப்பில் இயக்கியிருக்கும் படம் 'நெற்றிக்கண்'. இது ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதனையொட்டி நயன்தாரா டிவி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, நிச்சயதார்த்த மோதிரத்தை காண்பித்தார். தனது திருமணம் குறித்து நயன்தாரா வெளிப்படையாக பேசியுள்ளது இதுவே முதல்முறை. விரைவில் தங்களது திருமண நாளை அறிவிக்க இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இன்னொரு பக்கம் இதே பேட்டியில் அழுது கண்கலங்கினார். அதற்கான காரணம் அவரது அப்பா குறித்து கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு பதில் அளித்த நயன்தாரா, தனது அப்பாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லை என்றும், தன்னிடம் இப்போது இருக்கும் குணநலன்கள் தன் தந்தையை பார்த்து வந்ததாகவும், மேலும் அவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறிக் கண்கலங்கிய அவர், “ஆரம்பத்தில் இருந்தது போலவே, அப்பாவின் உடல்நலனை சீர் செய்து இயல்பு நிலைக்கு திரும்ப கொண்டு வந்துவிட்டால் அதைவிட தனக்கு பெரிய சந்தோஷம் எதுவுமில்லை” என்று என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: