free website hit counter

Sidebar

23
தி, ஜூன்
36 New Articles

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்"
என பதிவிட்டுள்ளார்.

மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula