free website hit counter

மும்பை-கோவா பயணக் கப்பலில் போதைப்பொருள் விருந்து தொடர்பாக விசாரணை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மும்பை பயண கப்பல் ஒன்றின் போதை பொருள் விருந்து தொடர்பாக 8 பேரிடன் விசாரணை நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வரும் மஹாராஷ்ட்டிராவில் நேற்று நள்ளிரவில் மும்பையில் இருந்து கோவா செல்ல புறப்பட்ட கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விருந்து ஆரம்பமானதை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவலறிந்து கப்பலுக்குள் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களையும் வைத்திருந்தவர்களிடமும் விசாரனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் போதை விருந்து நடத்தியது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்பட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction