free website hit counter

கல்வி சுற்றுலாவில் மாமல்லபுரம் முதலிடம் - பள்ளி மாணவர்களின் வருகை அதிகரிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, அதன் 1300 ஆண்டு, வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடம் பிடித்த டெல்லி தாஜ்மஹாலை, மாமல்லபுரம் மிஞ்சியது. அதேபோல் தற்போது கல்வி சுற்றுலா என்றதும் பள்ளி மாணவ-மாணவிகளிடம் முதல் இடம் பிடிப்பது மாமல்லபுரமாக மாறி வருகிறது.

ஏற்கனவே சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்பு, செஸ் ஒலிம்பியாட், காத்தாடி திருவிழா, ஜி-20, சவுண்ட் ராக்கெட் என பிரபலமான மாமல்லபுரம் தற்போது கல்வி சுற்றுலாவிலும் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction