தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் புதிய நடைமுறை மாற்றம் இலங்கை Previous Article 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து Next Article க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்படமாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக இந்த முறைமை செயற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். Previous Article 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் இரத்து Next Article க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு