free website hit counter

பெண்கள் உலகக்கோப்பை - இங்கிலாந்து அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி சதமடித்து, 170 ரன்கள் குவித்தார். ஹெய்ன்ஸ் 68 ரன்னிலும், பெத் மூனி 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

அதே நேரத்தில் சிறப்பாக விளையாடிய நாட் சிவேர் சதம் அடித்து அசத்தினார். ஒரு முனையில் அவர் அதிரடி காட்டினாலும் மறுமுனையில் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. இறுதியில் இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

நாட் சிவேர்148 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பை பட்டதை தட்டி சென்றது.

12-வது முறையாக நடைபெற்ற  பெண்கள் உலகக்கோப்பை தொடரில் 7-வது முறையாக ஆஸ்திரேலிய அணி பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: