free website hit counter

பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவராக வஹாப் ரியாஸ் நியமனம்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உலகக்கோப்பை தொடர் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் நேற்று நியமிக்கப்பட்டார்.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் களம் இறங்கியது. அதில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தனது பதவியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹின் அப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக நியமித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவரது முதல் பணியாக இருக்கும்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: