free website hit counter

ஆடிமாதத்தில் அருள் தரும் நாயகி !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று இவ்வருட ஆடிமாதத்தின் இறுதிச் செவ்வாய் மற்றும் ஆடி மாத பூரநட்சத்திர நன்நாளாகும். அகில லோகமாதவாக விளங்கும் அன்னை பராசக்தி இந்த ஆடிமாதத்தில் மானிடர்க்கு அருளை வாரிவழங்குவது பெரும் சிறப்பாகும்.

கருணைக்கடலாகவும் சந்தானம் நல்குபவளாகவும் புவனத்தாயாகவும் தூய்மையானவளாகவும் விளங்கும் அன்னை பார்வதி தேவியானவள் மங்களசண்டிகையாக அவதரித்து வேதங்களாலும் அறிஞர்களாலும் புகழப்பெற்றவள், அவளை ஆடிமாதத்தில் துதிப்பதால் அகில மக்களும் நன்னமையடைவர். அதிக கோபமும்,அதிக சாமர்த்தியமும் கொண்டதாயாக விளங்கும் மங்களசண்டிகை கல்யாணக் காரியங்களில் அனைத்து விதமான மங்களங்களும் தந்து மங்களமாய்த்திகழ்கிறாள்.

மனு வம்சத்தில் பிறந்த மங்களன் என்பவன் ஏழுத்தீபங்களுக்கும் அரசனாய்த்திகழந்தான் அவன் இச்சக்தியை விடாது துதி செய்து வழிபட்டு இஸ்ட லாபங்களை அடைந்ததால் மங்களசண்டிகை எனப் போற்றப்பட்டாள்.

மூலப்பிரக்ருதியாக விளங்கி அருள் பாலிப்பதில் கிருபாசமுத்திரம் ஆக விளங்குகின்ற சண்டிகை பெண்களின் இஸ்ட தேவதையாக மனதில் உள்ள குறைகளைத் தீர்க்கிறாள். மூர்த்தி பேதத்தால் துர்க்காதேவியான இவளை திரிபுரதகனம் சங்கார காலத்தில் சகல திரவியங்களாலும் துதி செய்து வெற்றியடையச் செய்வதற்காக விஸ்ணு முதலான சகலதேவர்களும் பூஜித்து வழிபட்டனர். அப்போது மங்கள சண்டிகா துர்க்கா ஸ்வரூபிணியாய் தொன்றி அமரர்களை நோக்கி "நீங்கள் பயப்பட வேண்டாம் ருத்திரமூர்த்தியால் திரிபுரம் வெற்றியுண்டாகும்"என்று அருள் கூறி மறைந்தாள். திரிபுர தகணம் வெற்றியடைந்ததும் தேவர்கள் சண்டிகையை பலவிதமான பழவகைகள், பால், தேன் பலவித திண்பண்டங்கள் பரமான்னம் பலவும் படைத்து
தியானங்களாலும் தோத்திரங்களாலும் அர்ச்சித்து ஆடல், பாடல், வாத்தியங்களாலும் பலவாறு போற்றிசை பாடி வழிபாடாற்றினர். எல்லாவிருப்பங்களையும் பூர்த்தி செய்யும் இருபத்தொரு அட்சரங்களால் ஆன கீழே குறிக்கப்பட்ட மூலமந்திரத்தையும் சொல்லி பூஜையை செய்துமுடித்தார்கள்.

"ஓம் ௳றிரீம் சிரீம் க்லீம் ஸர்வ பூஜ்யேதேவி மங்கள சண்டிகே சூம் சூம் பட் ஸ்வாகா"

இச்சுலோகத்தை பத்து லட்சம் தடவைகள் ஜபித்தால் மந்திரம் சித்தியாகும் என்று தேவி பாகவதம் கூறுகிறது. பதினாறு வயது நிரம்பியவளாகவும் கோவைப்பழம் போன்ற உதடுகளும்,அழகான பற்களும், சரத்காலத்தாமரை போன்ற வதனமும், வெண்செண்பகப்பூப்போன்ற நிறமும், கருநெய்தல் போன்ற விழிகளும் கொண்டு அகில உலகங்களையும் தாங்கி எல்லோருக்கும் எல்லாச் சம்பத்துக்களையும் தருபவளாகவும் விளங்கும் தேவியை நமஸ்கரிக்கின்றேன். இப்படிச் சொல்லும் தேவியின்ஸ்தோத்திரத்தை பிரதி செவ்வாய் கிழமை தோறும் உருத்திரமூர்த்தியானவர் தோத்தரித்து சகலமங்களத்தையும் பெற்றார். அவ்வாறே அங்காரகனும்,மங்களனும் மங்கையரும், மங்களத்தை விரும்பும் ஆடவரும்,தேவர் முனிவர்,மனுக்கள், மனிதர்கள் முதலிய யாவரும் மங்களத்தை அடைந்தனர்.

குறிப்பிடப்படவேண்டிய விடயம் அங்காரகன் எனும் செவ்வாய்க் கிரகம் தன்னால் பீடிக்கப்படும் ஜாதகர்கள் செவ்வாய்தோசம் நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து மங்களங்கள் அடைய வேண்டும், விரும்பிய வாழ்வு கிடைக்க வேண்டும் என்று மங்களசண்டிகையைத் துதிசெய்தார்.

மனிதர்களுக்கு நவக்கிரகங்கள் ஒன்பதும் பன்னிருராசிகளும் அவரவர் பிறந்த நட்சத்திரங்களும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிடம் கூறுகிறது. அதில் பூமிக்கும் கிரகங்களுக்கும் ஆன ஈர்ப்புவிசையினால் கிரகங்களின் ஆதிக்கம் மனிதர்களுக்கு தாக்கத்தை உண்டாக்குகிறது. அதனாலேயே அவர்கள் எந்தநேரத்தில் பிறந்தனரோ அந்த நேரத்தை வைத்து கணிக்கும் போது பன்னிரு கட்டங்களாக அதாவது வீடுகளாக குறித்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு,கேது எங்கு வீற்றிருக்கிறார்கள் என்று குறிப்பிடுகின்றனர். இதிலே செவ்வாய் ஏழாம், அல்லது
எட்டாம் வீடுகளில் இருந்தால் தோசம் என்று கூறுகின்றனர். கிரகங்களுக்கெல்லாம் நாயகியாக விளங்கும் துர்க்கை அம்பிகையை செவ்வாயில் விரதமிருந்து எலுமிச்சம்பழத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபாடாற்றுவர். அதிலும் "ஆடிமாதத்தில் வரும் ஆடிச்செவ்வாய் தேடிப்பிடி" என்று முன்னோர் கூறுவர். அதற்கேற்ப இராகுகால நேரத்தில் நெய்விளக்கு ஏற்றி ஆடி செவ்வாய் தோறும் மங்கள சண்டிகையை வழிபடுவோம். அன்னைக்கே உரித்தான வேதங்களையும் அவளது நாமங்களையும் அவளுக்கே உரித்தான இசையையும் கொண்டு அனுதினம் ஆராதிப்போம்.

"ரட்ச ரட்ச ஜகன்மாதா தேவி மங்கள சண்டிகே
௳ற ரீகே விபதாம் ராசே ௳றர்ச மங்கள காரிகே
௳ற ச மங்கள தசேச௳றச மங்கள தாயிகே
சுபே மங்கள தசேச சுபே மங்கள சண்டிகே.

ரட்ச ரட்ச ஜகன்மாதா ரட்ச ரட்ச ஜயதுர்க்கா
ரட்ச ரட்ச ஜயதுர்க்கா ரட்ச ரட்ச ஜகன்மாதா"

மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கன்னிகை ஸ்லோகம்
இதை ஒன்பது வாரம் சொல்லிடவே அருள் பெறும் என்றும் உலகம்.

- 4தமிழ்மீடியாவிற்காக: அருந்தா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula