free website hit counter

விருச்சிகம் : ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆகஸ்ட் மாத  விருச்சிக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:   சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞசம ஸ்தானத்தில் ராஹூ  - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன்  - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2024 அன்று சூரியன்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-08-2024 அன்று புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். 
தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பெண்கள் எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள். 

விசாகம்:
இந்த மாதம் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம்.

அனுஷம்:
இந்த மாதம் பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம்.

கேட்டை:
இந்த மாதம் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்ல முடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம்.

பரிகாரம்:  நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

 
 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula