தமிழ் சித்திரைப் புத்தாண்டு பராபவ எனும் பெயருடன் 14.04.2026 செவ்வாய்கிழமை பிறக்கின்றது. இப் புதிய வருடத்தில் பன்னிரு ராசிகளுக்குமான பலன்களை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிடர் பெருங்குளம் இராம கிருஸ்ணன் அவர்கள் எழுதிய பலன்களைத் தொடர்ந்து காணலாம்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீபராபவ வருஷம் - உத்தராயனம் - வஸந்த ரிது - சித்திரை மாதம் - 01ம் தேதி - 14.04.2026 - அன்றைய தினம் செவ்வாய்கிழமையும் - க்ருஷ்ண பக்ஷ துவாதசியும் - சதயம் நக்ஷத்ரமும் - சுப்ர நாமயோகமும் - கௌலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 8.44க்கு (உதயாதி நாழிகை: 06:27)க்கு ரிஷப லக்னத்தில் ஸ்ரீபராபவ வருஷம் பிறக்கிறது.
கத வர்த்தமான வருஷங்கள்:
கதசாலிவாஹண 1948 - 49
கல்யப்தம் - 5127
வர்த்தமான ஆங்கிலம் - 2026 - 2027
பஸலி - 1435 - 1436
கொல்லம் - 1201 - 1202
வர்த்தமான ஹிஜ்ரி - 1447 - 48
விக்ரமசகம் - 2082 - 83
வள்ளுவர் - 2058
பிரபவாதி - 40
சேஷகலி - 426875
கிரக பாதசார விபரங்கள்:
லக்னம் - ரோகினி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - பூரட்டாதி 3ம் பாதம் - குரு சாரம்
செவ்வாய் - உத்திரட்டாதி 3ம் பாதம் - சனி சாரம்
புதன் - உத்திரட்டாதி 4ம் பாதம் - சனி சாரம்
குரு - புனர்பூசம் 2ம் பாதம் - குரு சாரம்
சுக்ரன் - பரணி 3ம் பாதம் - சுக்ரன் சாரம்
சனி - உத்திரட்டாதி 1ம் பாதம் - சனி சாரம்
ராஹு - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
கேது - மகம் 2ம் பாதம் - கேது சாரம்
ராகு தசை இருப்பு: 04 வருஷம் - 06 மாதம் - 20 நாள்
பராபவ வருஷத்தின் நவநாயகர்கள்:
| ராஜா | குரு |
| மந்திரி | செவ்வாய் |
| அர்க்காபதி | சந்திரன் |
| மேகாதிபதி | சந்திரன் |
| ஸஸ்யாதிபதி | சுக்ரன் |
| சேனாதிபதி | சந்திரன் |
| இரஸாதிபதி | சூர்யன் |
| தான்யாதிபதி | புதன் |
| நீரஸாபதி | சுக்ரன் |
| பசுநாயகர் | கோபாலன் |
| ஸங்கிராந்தி தேவதை | மந்தாகினி |
பராபவ வருஷ வெண்பா:
மிக்க பராபவத்தின் மேதினியிற் பின் மழையாம்
தக்க பசுக்கள் தழைக்குமே - இக்குப்
பலிக்காது நான்கு வகைப் பல்லுயிர்க்குமின்பம்
கலிக்கா தெனவே கருது.
இடைக்காட்டார்
பாடல் விளக்கம்:
பராபவ வருஷத்தில் வருஷ முன் பகுதியில் மழை குறைந்த அளவு பெய்யும். பின் பகுதியில் மிகுந்த மழை பெய்யும். பசுக்கள் செழிப்பாக வளர்க்கப்பட்டு பால்வளம் அதிகமாகும். அனைத்து மக்களும் செழிப்புடன் வாழ்வார்கள். நாட்டு மக்கள் நோயின்றி சிறப்பாக வாழ்வார்கள்.
- காலை நேர உளவளப் பயிற்சிகள் -
பொது பலன்கள்:
வருடம் ஆரம்பத்தில் குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். வைகாசி மாதம் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுன ராசியில் இருக்கும் காலகட்டத்தில் அரசர்கள் யுத்தத்தில் பிரியமுள்ளவர்களாக இருப்பார்கள். பூமியில் ஈதிபாதையும் பயிர்கெடுதியும் சில இடங்களில் மழை அதிக அளவும் இருக்கும். கடக ராசியில் இருக்கும் காலத்தில் விவசாயம் சிறக்கும். ஆன்மீக பணிகள் முன்னேற்றம் இருக்கும். உலகளவில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமண தடை நீங்கும்.
நீர் ராசியில் குரு இருப்பதால் மழை பொழிவு அதிகம் இருக்கும். உலக பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். பாவத்தின் அடிப்படையில் 4ம் இடமான கடகத்தில் குரு உச்சமாவதால் விவசாயம் செழிக்கும். ராகு கேதுவின் சஞ்சாரத்தால் மக்களுக்கு ஆரோக்கியம் உண்டாகும். அரசர்களின் மன நிலை மாறி யுத்த நிலை மாறும். மழை வருஷிக்கும். கல்வியில் மாணவர்கள் புதிய நிலையை அடைவார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிய உச்சத்தை தொடும்.
புதிய நோய்கள் வந்தாலும் மக்களின் வாழ்க்கையை முடக்கும் அளவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.
ராஜா குரு பலன்
ஆன்மீகம் தழைக்கும். வங்கி, நீதி நெறிமுறைகள் சிறப்பாகும்.
மந்திரி செவ்வாய் பலன்
இந்த ஆண்டு மந்திரியாக செவ்வாய் பகவான் வருவதால் தீ விபத்துக்கள் ஏற்படும். சில இடங்களில் மழை குறைவாக பெய்யும்.
மேக அதிபதி சந்திரன் பலன்
இந்த ஆண்டு மேக அதிபதியாக சந்திர பகவான் வருவதால் சரியான காலத்தில் மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும்.
ஸஸ்யாதிபதி சுக்ரன் பலன்
இந்த ஆண்டு ஸஸ்யாதிபதியாக சுக்ர பகவான் இருப்பதால் புஷ்பங்கள் அதிகமாக விளையும், வாசனை வஸ்துக்கள் அதிகரிக்கும்.
சேனாதிபதி சந்திரன் பலன்
சந்திரன் பலத்தால் இந்த ஆண்டு பெண்கள் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவர். மக்கள் சுகமாக வாழ்வார்கள்.
ரஸாதிபதி சூர்யன் பலன்
நூதனமான எண்ணை உற்பத்தி, எண்ணை உற்பத்தி அதிகமாவதால் விலை குறையும்.
தான்யாதிபதி புதன் பலன்
இந்த ஆண்டு மழை, புயல் சேதங்களால் தான்ய உற்பத்தி குறையும்.
நீரஸாதிபதி சுக்ரன் பலன்
இந்த ஆண்டு திடப்பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கும். பட்டு ஜவுளி உற்பத்தி அதிகரிக்கும்.
சித்திரை மாதப் பிறப்பின் பலன்
இந்த ஆண்டு சித்திரை மாதம் செவ்வாய்கிழமை அன்று வருவதால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள் பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்
மகர சங்கராந்தி மிஸ்ரகை பலன்
இந்த ஆண்டு வியாழக்கிழமை பிறப்பதால் நல்ல மழை பெய்யும். கல்வி சம்பந்தமான விஷயங்களில் நல்ல மாற்றங்கள் வந்து சேரும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நாமதேயம் மூலமாக நன்மைகள் நடக்கும். சன்னியாசிகளுக்குப் பீடை
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

