free website hit counter

கடகம்: ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆகஸ்ட் மாத  கடக இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:  ராசியில் சூர்யன், புதன் (வ), சுக்ரன்  - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய    ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2024 அன்று சூரியன்  ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-08-2024 அன்று செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-08-2024 அன்று புதன் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நளினமாக பேசி காரியங்களை சாதிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். 

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான   சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். 

புனர்பூசம்:
இந்த மாதம் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.

பூசம்:
இந்த மாதம் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும்.  பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.

ஆயில்யம்:
இந்த மாதம் உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும்.  உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.

பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - திங்கள் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

 ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம். 

 
 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula