பன்னாட்டளவில் புகழ் பெற்ற மெக்சிக்கோ நாட்டுப் பெண் ஓவியரின் தன்னுருவ ஓவியம் ஒன்று அமெரிக்க ஏலத்தில் 34.9 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட லத்தீன் அமெரிக்க ஓவியங்களில் மிக மதிப்புமிக்க படைப்பிற்கான சாதனையை முறியடித்தது
பிரிடா காலோ 1949 இல் தான் இறப்பதற்கு முன் வரைந்த இறுதி ஓவியமாக கருதப்படும் "டியாகோ மற்றும் நான்" எனும் இந்த ஓவியம் மார்பளவு சுய உருவப்படமாகும். இந்த ஓவியம் ப்ரிடா மற்றும் அவரது கணவர் டியாகோவின் உருவத்தை நெற்றிக்கண்களில் வைத்தாற்போல் தீட்டப்பட்டுள்ளது.
ஜூலை 6, 1907 இல் பிறந்த பிரிடா காலோ மெக்சிக்கோவின் ஐரோப்பியக் கலை இயக்கங்களின் செல்வாக்கை கொண்ட நாட்டுப்புற கலை பாணியில்; உயிர்ப்புள்ள நிறங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைவதில் வல்லவர். அதிலும் அவரது பெண்ணியத்துன்பங்கள் மற்றும் தன்மையையும் வெளிப்படுத்தும் தன்னுருவ ஓவியங்கள் சர்வதேச அளவில் சிறப்பானவைகளாக கொண்டாடப்பட்டுவருகிறது.
பிரிடா காலோ சிறுவயது முதல் போலியோ நோய் தாக்கத்தாலும் பின்னர் வாகன விபத்து ஒன்றினாலும் தன் வாழ்நாள் முழுவதும் வலியையும் மருத்துவ சிக்கல்களையும் எதிர்கொண்டவர். மருத்துவக் கல்வி பயிலவிருந்த பிரிடா விபத்தினால் அதனை கைவிட வேண்டியிருந்தது. சிறு வயதுமுதல் ஓவியக்கலையை பொழுதுபோக்காக கொண்டிருந்ததால் ஓவியங்கள் வரைவதில் கவனம் செலுத்தினார் அதுவே அவரை சிறந்த கலைஞராக மாற்றியமைத்தது, மேலும் அரசியலில் ஆர்வம் கொண்டு மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அங்கு சுவர் சிற்பியான டியாகோ ரிவேராவைச் சந்தித்து திருமணமும் செய்துகொண்டார்.
கஹ்லோவின் சுய உருவ ஓவியங்கள் அவரது அழகிய பின்னல் ஜடை, ஜடையில் செருகியிருக்கும் வண்ணப்பூக்கள், அடர்த்தியான நீண்ட புருவம், சிவப்பு உதடுகள் ஆகியவைகளை எப்போதும் பிரதிபலிக்கும், இவை எண்ணற்ற நகர்ப்புற ஆடைகள் ஆடைகள் மற்றும் பிற வணிக பொருட்களில் அச்சிடப்பட்டு விற்கப்படுவது குறிப்பிடதக்கது.
ஆனால் அந்த பிரகாசமான வண்ணங்களுக்குப் பின்னால் பிரிடாவின் உடல் மற்றும் மன வலிகள் நிறைந்த வாழ்க்கையின் கதை கொண்டது எனலாம்.