நேற்று செவ்வாய்க்கிழமை அண்டை நாடான உகாண்டா தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக கென்யா அரசாங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பில் கென்யா அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில் ; பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து புகார் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறினார்.
உகாண்டாவில், மூன்று தற்கொலை குண்டுதாரிகள் இரண்டு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்த சம்பவம் அசிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள உகாண்டாவின் தலைமை காவல் நிலையம் அருகே ஒரு வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது வெடிகுண்டு தாக்குதல் பாராளுமன்றம் அருகே நிகழ்த்தப்பட்டது. இதில் மூவர் பலியானதோடு பலர் காயமடைந்திருந்தனர்.
இவ்விரு வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் துணை இராணுவ உதவியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.