முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கேபிடல் கலவரத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளை அடுத்து கடந்த ஜனவரி மாதம் இரு தளங்களிலிருந்தும் அவர் காலவரையின்றி தடைசெய்யப்பட்டார். இதன் தொடர்பில் அந்நிறுவம் டிரம்பின் நடவடிக்கைகள் "எங்கள் விதிகளை கடுமையாக மீறுவதாக" கூறியிருந்தது.
அரசியல்வாதிகள் தங்கள் கருத்துக்கள் செய்திக்குரியவை என்ற அடிப்படையில் அவர்கள் ஏமாற்றும் அல்லது தவறான உள்ளடக்கத்திற்கு இனி எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என பேஸ்புக் நிறுவனம் இச்செயற்பாடு குறித்து சுட்டிக்காட்டியுள்ளது