கொரோனா வைரஸ் தொடர்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்; சீனாவில்தான் முதன்முதலில் இவ் வைரஸ் கண்டறியப்பட்டதாக தான் முன்பு கூறிய கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆண்டின் இறுதியிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் சீனாவில்தான் முதன்முதலாக இவ் வைரஸ் பரவத்தொடங்கியமையால் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் மீது பல குற்றச்சாட்டுக்களை சாட்டிவந்தார். மேலும் பல்வேறு தரப்பினரும் சீனா மீது குற்றம் சுமத்திவந்த ப்போதும் சீனா திட்டவட்டமாக இக்கூற்றுக்களை மறுத்துவருகிறது.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்க ஊடகங்களில் கொரோனா வைரஸ் உருவானது தொடர்பில் செய்திகள் சில ஆதாரங்களுடன் வெளிவந்ததாகவும் அவை வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது; அச்செய்திகளில் சீனாவின் உஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சீனா இத்தகவல்களை கண்டித்துள்ளது.
இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடிக்க உளவுத்துறைக்கு உத்தரவு பிரப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்க முன்னால் அதிபர் டிரம்ப் தனது செய்தி ஒன்றில் கொரோனா வைரசின் தோற்றம் குறித்து நான் முன்பே கூறியது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதனை இப்போது சிலர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.