சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு அருகாமையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை உலகப் பொருளாதார மன்றத்திற்கு (WEF) எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இப்போராட்டப் பேரணியிலிருந்து பிரிந்து சென்று, சாலைமறியல் போராட்டம் செய்த சுமார் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாவோஸ் லாரெட் அருகே நடைபெற்ற இப்போராட்டங்களால், பிரதான போக்குவரத்துச் சாலையில், சுமார் ஒரு மணிநேரம் வரையில் வாகனங்களின் பயணிப்பு தடைப்பட்டதால், வாகன நெரிசலும் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபின் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.