கடந்த வருடம் ஆர்மெனியா மற்றும் அஷெர்பைஜான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதல் இடம்பெற்ற போது அதில் அஷெர்பைஜான் தோற்கடிக்கப் பட்டுமிருந்தது.
சுமார் 6 வாரங்கள் நீடித்த இந்த மோதலில் 6000 உயிர்கள் வரை பறிக்கப் பட்டன. இந்த யுத்தத்தைக் கையாண்ட விதத்தால் ஏற்பட்ட அவமானம் மற்றும் இதன் பின்னதான நிவாரணம் போன்ற விடயங்களில் ஆர்மெனிய பிரதமர் பஷின்யான் நடந்து கொண்ட விதம் ஆர்மெனியர்களைக் கடும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
இதனால் ஏற்பட்ட அரசியல் முறுகலை முடிவுக்குக் கொண்டு வர ஆர்மெனியாவின் பிரதமர் நிக்கோல் பஷின்யான் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2018 இல் பதவிக்கு வந்த 46 வயதாகும் பஷின்யான் முன்னால் பத்திரிகை ஆசிரியர் ஆவார். சோவியத் யூனியன் பிளவு பட்டதன் பின்பு ஆளப்பட்டு வந்த ஊழல் நிர்வாகிகளுக்கு எதிராக அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்களை இவர் தலைமை தாங்கியிருந்தார்.
நவம்பரில் நகோர்னோ கரபாஃக் பகுதியில் யுத்தம் முடிவுக்கு வந்த போது பிரசித்தமற்ற ஒப்பந்தம் ஒன்றில் இவர் கைச்சாத்திட்டதும், இதனால் ஆர்மெனியர்கள் வசமிருந்த ஒரு பெரும் நிலப் பகுதி அஷெர்பைஜான் குடிமக்களுக்கு வழங்க நேர்ந்ததும் ஆர்மேனியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பதவி விலகுமாறு விடுக்கப் பட்ட அழைப்புக்களை பஷின்யான் மறுத்து வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலானது OCSE எனப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பினால் கண்காணிக்கப் படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.