free website hit counter

கோவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வு அமெரிக்காவிலிருந்தும் தொடங்கப் பட வேண்டும்! : சீன நிபுணர்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோவிட்-19 பெரும் தொற்று நோயானது சீனாவில் இருந்து எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலான ஆய்வுகள் போதுமானளவு மேற்கொள்ளப் பட்டு விட்டதாகவும் தற்போது இது தொடர்பான முக்கியத்துவம் அமெரிக்காவில் இருந்து எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பது தொடர்பாக இருக்க வேண்டும் என்றும் சீனாவின் மூத்த தொற்று நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் NIH எனப்படும் தேசிய சுகாதார ஆய்வகத்தினால் வெளியான அறிக்கை ஒன்றில், கூறப்பட்டுள்ள படி அமெரிக்கா தனது முதலாவது கோவிட்-19 தொற்றாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சில கிழமைகளுக்கு முன்பே குறித்த SARS-CoV-2 என்ற கோவிட் வைரஸினால் அமெரிக்காவின் 5 மாநிலங்களில் குறைந்து 7 பேர் தொற்றப் பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மார்ச்சில் சீனாவும், உலக சுகாதாரத் தாபனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 இன் தோற்றம் சீனாவின் வனவிலங்குகள் சந்தையில், வௌவால்களில் இருந்து, அவற்றை உட்கொண்ட வேறு உயிரினங்கள் வாயிலாக மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்றே கூறப்பட்டிருந்தது.

ஆனால் இது தவிர உயிரியல் ஆய்வு கூடங்களில் இருந்து கோவிட்-19 வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற கருதுகோளும், வெளிநாடுகளில் இருந்து வந்த உறைந்த கெட்டுப் போன உணவுகளில் இருந்து பரவியிருக்கலாம் என்ற சீனாவின் கருத்தும் கூட நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் NIH இதழில் வெளியான தகவலை சுட்டிக் காட்டி சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஷாவோ லிஜியான் கூறுகையில், கோவிட்-19 பெரும் தொற்று வைரஸானது பல்வேறு பட்ட இடங்களில் தோற்றம் பெற்றிருப்பதற்கான வாய்ப்புக்கள் வெளிப்படையாகவே உள்ளதாகவும் இதனால், உலக சுகாதாரத் தாபனத்தின் ஆய்வுக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பெரும் தொற்று பெரும் தொற்று நோயாக ஆரம்பத்தில் பரிணமிக்கத் தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் WIV என்ற வைராலஜி ஆய்வகம் அமைந்திருந்த காரணத்தால், சீனாவே இதற்குக் காரணம் என ஆரம்பம் முதலே அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் இவ்விரு வல்லரசுகளுக்கும் இடையே அரசியல் பதற்றம் மிகவும் அதிகரித்தது.

இதேவேளை பிரான்ஸில் சில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதியுடன் பிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு நிறைவுக்கு வருகின்றது. இது முன்பு தீர்மானிக்கப் பட்டதை விட 10 நாட்கள் விரைவாகும். ஆயினும் நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசைகளின் போதும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களிலும் மாத்திரம் முகக் கவசம் அணிவது கட்டாயமானது ஆகும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 177 828 032
மொத்த உயிரிழப்புக்கள் : 3 849 299
குணமடைந்தவர்கள் : 162 338 872
ஆக்டிவ் தொற்றுக்கள் : 11 639 861
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 82 978

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 365 985 : மொத்த உயிரிழப்புக்கள் : 616 150
இந்தியா : 29 700 313 : 381 931
பிரேசில் : 17 629 714 : 493 837
பிரான்ஸ் : 5 747 647 : 110 578
துருக்கி : 5 348 249 : 48 950
ரஷ்யா : 5 249 990 : 127 576
பிரிட்டன் : 4 589 814 : 127 926
இத்தாலி : 4 248 432 : 127 153
ஆர்ஜெண்டினா : 4 198 620 : 87 261
கொலம்பியா : 3 829 879 : 97 560
ஸ்பெயின் : 3 749 031 : 80 615
ஜேர்மனி : 3 726 731 : 90 748
ஈரான் : 3 060 135 : 82 480
போலந்து : 2 878 061 : 74 688
மெக்ஸிக்கோ : 2 463 390 : 230 624
தென்னாப்பிரிக்கா : 1 774 312 : 58 223
கனடா : 1 405 146 : 26 001
பாகிஸ்தான் : 945 184 : 21 874
பங்களாதேஷ் : 837 247 : 13 282
ஜப்பான் : 779 338 : 14 269
சுவிட்சர்லாந்து : 701 260 : 10 868
இலங்கை : 230 692 : 2374
சீனா : 91 511 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction