இந்தியாவுடன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தானில் உள்ள வங்கிகளில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் பணத்தை திரும்ப பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் பொதுமக்கள் குவிந்து வருவதால் வங்கி அதிகாரிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒருநாளைக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
மேலும் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்களில் பணம் எடுக்க முடியாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.